புடினின் ஈரான் பயணம் உலக அரங்கில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை காட்டுகிறது.! வெள்ளை மாளிகை.! - Seithipunal
Seithipunal


புடினின் ஈரான் பயணம் உலக அரங்கில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை  காட்டுகிறது என்று அமெரிக்கா வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அரசுமுறை பயணமாக ஈரான் சென்றுள்ளார்.

உக்ரைன் ரஷ்ய இடையான போர் தொடங்கிய பிறகு முன்னாள் சோவியத் யூனியன் பகுதிக்கு வெளியே ரஷ்ய அதிபர் புடின் செல்வது இதுவே முதல் முறையாகும்.

ஈரான் சென்ற அதிபர் புடின், ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனி மற்றும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோரை சந்திக்கிறார்.

இந்நிலையில் ரஷ்யா அதிபர் புடினின் ஈரான் பயணம் உலக அரங்கில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும் ஈரானிடம் உதவியை ரஷ்யா நாடுகிறது. அவர்களிடமிருந்து ஆயுதம் ஏந்தியுள்ள ஆளில்லா ட்ரோன்களை கோருவதன் மூலம், உக்ரைனில் நடக்கும் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் அதிபர் புடின் தீவிரம் காட்டவில்லை என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Putin visit to Iran shows his isolation from world


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->