எம்.பி.க்களின் சம்பளத்தை குறைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம் – வாகனங்களுக்கு தீவைத்து பாராளுமன்றம் முற்றுகை
Public protests in Indonesia demanding a reduction in MP salaries riots involving burning vehicles
இந்தோனேசியாவில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.பி.) மாதம் சுமார் ₹5 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. இது, அந்த நாட்டின் சராசரி மாத வருமானமான ₹17 ஆயிரத்தை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.
சம்பளத்துடன் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருவதால், பொருளாதார நெருக்கடியின் சூழலில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பளக் குறைப்பை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை விரட்டினர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக, பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
English Summary
Public protests in Indonesia demanding a reduction in MP salaries riots involving burning vehicles