தற்காலிக சிறைகள் அமைத்து கைதிகள் சித்திரவதை - உக்ரைன் குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 6 மாதங்களையும் கடந்து நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து முன்னேறி வரும் உக்ரைன் படைகள் ரஷ்யாவிடமிருந்து முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொசாகா லோபன் பகுதியில் தற்காலிக சிறைகள் அமைத்து சோவியத் கால ரேடியோ தொலைபேசிகளை கொண்டு மின்சாரம் பாய்ச்சி கைதிகளை ரஷ்யபடைகள் சித்திரவதை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து கொசாகா லோபன் பகுதியில் ரஷ்ய படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்த கைதிகளுக்கு புதைக்குழிகள் தேடப்பட்டு வரும் நிலையில், போரால் உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது என்று உக்ரைன் பாதுகாப்புப் படை கமாண்டா் வைட்டாலி தெரிவித்துள்ளார்.

மேலும் 10க்கும் மேற்பட்ட சித்திரவதை முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளோம் எனவும், அப்பகுதியில் உள்ள ரயில் நிலைய கைதிகளை சித்திரவதை செய்யும் அறைகளையும், அதற்கான கருவிகளையும் கண்டறியப்பட்டுள்ளன என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prisoners tortured by setting up temporary prisons


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->