அப்படியா!சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டமாக குரோஷியா சென்றார் பிரதமர் மோடி...!
Prime Minister Modi went to Croatia as next leg of his tour
அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.கடந்த 15-ம் தேதி இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக அவர் சைப்ரஸ் சென்றார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி கிறிஸ்டோடவுலிட்சை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி கனடா சென்றார். அங்கு கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நேற்று நடந்த ஜி7 (G 7 )உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த மாநாட்டில் இத்தாலி, கனடா பிரதமர், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.இந்த நிலையில், கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு குரோஷியா சென்றடைந்தார்.
இதில் ஜாக்ரெப் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், குரோஷியா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் சோரன் மிலனொவ் மற்றும் பிரதமர் பிளென்கோவிக்கை சந்திக்கிறார்.இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
English Summary
Prime Minister Modi went to Croatia as next leg of his tour