உக்ரைன் மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைக்க தொடங்கியது பொது வாக்கெடுப்பு.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா எல்லையை ஒட்டி அமைந்துள்ள உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் ரஷ்யா கைப்பற்றியுள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், ஜாபோர்ஜியா மற்றும் கெர்சன் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நேற்று தொடங்கியது.

இதையடுத்து வரும் 27ஆம் தேதி வரை வாக்கெடுப்பு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ரஷ்யா கட்டுப்பாட்டு பகுதிக்குள் வாக்கெடுப்பு நடைபெறுவதால் வாக்கெடுப்பின் முடிவு ரஷ்யாவுக்கு சாதகமாகவே அமையும் என்று கூறப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பில் ரஷ்ய அதிகாரிகள் வாக்கு பெட்டிகளின் மூலம் வீடு வீடாகச் சென்று வாக்கு பதிவு செய்து வரும் நிலையில், கடைசி நாளான 27ஆம் தேதியில் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைனில் இந்த நான்கு மாகாணங்களிலிருந்து மக்கள் ரஷ்யாவிற்கு சென்றுள்ளதால் ரஷ்யாவிலும் வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Poll started to annexe ukraine provinces to Russia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->