காக்க வேண்டிய போலிசே கற்பழித்த சோகம்.! இளம்பெண்ணிடம் தகாத வேலை செய்த காவல்துறை.!
Policeman rapped young girl in Pakistan
பாகிஸ்தான் காவல் அதிகாரி ஒருவர், இளம் பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்த காரணத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் நாட்டில் அமைந்துள்ள ஒகாரா மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி இளம்பெண் ஒருவரை மோசமாக தாக்கி பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அந்த அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்ட காவல்துறை அதிகாரி இச்சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கின்றார்.
மேலும், குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு தனி குழுவை அமைத்துள்ளார். இந்தக் குழுவானது மூன்று நாட்களில் விசாரணை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று காவல் துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காப்பாற்ற வேண்டிய காவல் துறையே இப்படி கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Policeman rapped young girl in Pakistan