உக்ரைனில் போர் பதற்றம்.. அகதிகளாக வெளியேறும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

போர் காரணமாக இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.  ராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலும் ரஷ்ய தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. 

போர் பதற்றம் காரணமாக உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 5 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐநா சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. போர் தீவிரம் அடையும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்கள் போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும்  மால்டோவா ஆகிய நாடுகளின் எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக போலந்து நாட்டு எல்லையில் 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் குவிந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

people fleeing ukraine as refugees


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->