கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியர்.. சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர்.! - Seithipunal
Seithipunal


பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் பழைய நகரில் வடக்கு பகுதியில் 20 வயது இஸ்ரேலிய இளைஞர் மீது பாலஸ்தீனியர் கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த இஸ்ரேலியர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பாலஸ்தீனியரை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில் கிழக்கு ஜெருசலேமின் ஷேக் ஹரக் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியரை இஸ்ரேல் பாதுகாப்புபடையினர் கைது செய்ய முற்பட்டனர். ஆனால் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது, இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் அவரை சுட்டுக்கொன்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palestinian stabbing attack shot dead by security forces


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->