நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய பாகிஸ்தான் நடிகை.! வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கீரவானி இசையமைத்த இத்திரைப்படத்திற்கு 'நாட்டு நாட்டு' பாடல் மிகவும் பிரபலமானது. 

இந்த பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றது. இதைத் தொடர்ந்து இந்தப் பாடல் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

இந்த நிலையில், இந்த பாடலை பல்வேறு வெளிநாட்டினரும் ரசித்து வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹைனா அமீர். இவர் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடித்து பிரபலமடைந்துள்ளார். இவர் சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். 

அங்கு, அவர் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் வீடியாவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pakisthan actor hyna ameer dance to naatu naatu song in marriage function


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->