துருக்கி சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர்: அந்நாட்டு அதிபர் எர்டோகனை ஷெரீப்புடன் சந்திப்பு..! - Seithipunal
Seithipunal


காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 09 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் கடந்த 07-ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. 

இதையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கும் இந்தியா பதிலடியாக பாகிஸ்தான் மீது டிரோன்கள், ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. 03 நாட்கள் நடந்த சண்டையில் பலர் உயிரிழந்தனர். பின்னர் இருதரப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குபின் 10-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. 

இந்த தாக்குதலில் இந்தியாவிற்கு ஆதரவாக பல நாடுகள் ஆதரவு செறிவித்து வந்தாலும், துருக்கி, அசர்பைஜான் ஆகிய 2 நாடுகளும் பாகிஸ்தானுக்கு நேரடி ஆதரவு தெரிவித்தன. அத்துடன், இந்தியா மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் துருக்கி வழங்கிய ஆயுதங்கள், டிரோன்களை பயன்படுத்தியது. 

இதன் காரணமாக துருக்கிக்கு எதிராக இந்தியாவில் குரல் எழுந்ததோடு, துருக்கி பொருட்களை வர்த்தக நிறுவனங்கள் விற்பனை செய்வதை நிறுத்தின. அத்துடன், துருக்கிக்கு சுற்றுலா செல்வதையும் இந்தியர்கள் நிறுத்தினர். 

இந்நிலையில்,துருக்கி சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் துருக்கி அதிபர் எர்டோகனை ஷெரீப் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், ஆயுத விற்பனை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான மோதல் நடைபெற்று சில நாட்களே ஆன நிலையில் துருக்கி அதிபர் எர்டோகனை பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistani Prime Minister visits Turkey meets President Erdogan and Sharif


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->