பிரதமரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் பெயர் மாற்றம்..பாகிஸ்தான் பிரதமர் இன்று ராஜினாமா.? - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக், அவாமி தேசிய கட்சி,  ஜாமி யத் உல்மா இ இஸ்லாம் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளனர். மேலும் இவை இம்ரான்கான் அரசு மீது அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் அளித்துள்ளனர்.

இம்ரான் கானின் அரசை கவிழ்த்து விட எதிர்க்கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இன்று இஸ்லாமாபாத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த பொதுக் கூட்டத்திற்கு முன்பாக பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று வழக்கமாக இந்த யூ ட்யூப் பக்கமானது 'பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம்' (PMO) என இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்தப் பக்கத்திலிருந்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் என்ற வாக்கியம் நீங்கி இம்ரான்கான் என்று உள்ளது.

தற்போது இந்த மாற்றமானது அவர் பதவியில் இருந்து விரைவில் விலகக் கூடும் என்ற சந்தேகத்தை மேலும் தூண்டியுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan prime minister imran Khan resign


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->