பெண்களை சீரழிக்கும் காமுக கூட்டத்திற்கு ஆண்மை நீக்கும் தண்டனை?.. பாகிஸ்தான் அரசு அதிரடி..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் முன்னிலையில் பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. 

இந்த விஷயம் தொடர்பாக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கி தண்டனை வழங்கும் விதமாகவும், கற்பழிப்பு மற்றும் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரணை செய்யவும் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு, அவசர சட்ட வரைவை அமைச்சரவையில் தாக்கல் செய்த சமயத்தில், கடுமையான தண்டனை குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில், அங்குள்ள அரசு வட்டாரங்களில் இந்த தகவல் பேசப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Govt Plan to removing masculinity for Sexual abuse case culprits


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->