#Breaking: பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து.. 100 பேரின் கதி என்ன?..!! பரபரப்பு வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் அருகே பயணிகள் விமானமானது விபத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், லாகூரில் இருந்து  கராச்சி வந்த விமானம் தரையிறங்கும் நேரத்தில் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் தரையிறங்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டதை அடுத்து விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விமானத்தில் சுமார் 91 பேர் பயணிகள் உட்பட 100 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், கராச்சி விமான நிலையம் அருகே இருக்கும் குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரிந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan flight crash in Karachi airport more details awaited


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->