பாகிஸ்தான்! எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 25க்கும் மேற்பட்ட ஆயில்டேங்கர் லாரிகள் சேதம்.!
Pakistan fire accident
பாகிஸ்தான் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 25க்கும் மேற்பட்ட ஆயில் டேங்கர் லாரிகள் சேதமடைந்துள்ளன.
பாகிஸ்தான் நவ்ஷேரா மாவட்டத்திலுள்ள எண்ணெய் கிடங்கில் திடீரென்று பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது காற்றில் வேகமாக பரவியதால் எண்ணெய் கிடங்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் டேங்கர் லாரிகளில் தீ பரவியது.
இந்த பயங்கரமான தீவிபத்தில் 25 மேற்பட்ட டேங்கர் லாரிகள் எரிந்து சேதமடைந்தது. பெரும் தீப்பிடித்ததில் விண்ணைத்தொடும் அளவிற்கு கரும்பு கைகளுடன் தீயானது கொழுந்துவிட்டு எரிந்து உள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்குப் பின்பு தீயை அணைத்தனர்.
மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.