இந்தியாவிற்கு எதிராக சைபர் ராணுவம்.! வெளிச்சத்திற்கு வந்த பாகிஸ்தானின் ரகசியம்.! - Seithipunal
Seithipunal


இந்தியா நாட்டிற்கு எதிராக சைபர் ராணுவத்தை அமைப்பதற்காக பாகிஸ்தான் நாட்டிற்கு துருக்கி நாடு ரகசியமாக உதவியதற்கான தகவல் வெளிச்சதிற்கு வந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியாவை தாக்கும் வகையில் இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் செய்துகொண்டதாக நோர்டிக் மானிட்டர் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் முன்மொழிந்தார்.

கடந்த 2018 ம் ஆண்டு துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லுவுடன் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்திய சந்திப்பின் போது இந்தியாவை எதிர்கொள்வதற்காக சைபர் ராணுவத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது என்று தெரிவித்துள்ளது. நோர்டிக் மானிட்டரின் தகவல்படி இந்த விஷயம் இரு அரசாங்கங்களுக்கு இடையே மிக உயர்ந்த மட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது. 

இந்த விஷயம் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் ஊழியர்களுக்கு கூட தெரியாமல் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், துருக்கி எர்டோகனின் ஆளும் கட்சியுடன் இணையாத சில முக்கிய சமூக மற்றும் அரசியல் பிரமுகர்களை அவமானப்படுத்தவும் குறிவைக்கவும் சோய்லு ரகசியமாக டுவிட்டர் குழுவை அமைத்துள்ளார். 

இதையடுத்து, சோயிலு ஒரு கட்டத்தில் 6000 பேர் கொண்ட படையைக் கட்டுப்படுத்தினார். பின்னர், அவரது கட்டளையின் கீழ் உள்ள சைபர் பிரிவு குழுக்கள் எதிரிகளின் மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்து அவர்களின் மொபைல் போன்களில் இருந்து தனிப்பட்ட தரவுகளை திருடி பிளாக்மெயில் செய்வதற்கு சேகரித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan cybar crime against india


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->