அதல பாதாளத்தில் பாகிஸ்தான்! ரூ.25 லட்சம் கோடிக்கும் மேல் கடன் சுமை உயர்வு!
Pakistan credit 80 trillion June 2025
பாகிஸ்தானின் பொருளாதாரம் கடன் சுமையால் திணறி வருகிறது. 2025 நிதியாண்டில் அந்நாட்டின் மொத்தக் கடன் பாகிஸ்தான் ரூபாயில் 80.6 ட்ரில்லியன் (அமெரிக்க டாலரில் 286.832 பில்லியன்) என உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 லட்சம் கோடிக்கும் மேல் ஆகும். கடந்த 2024 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது 13 மடங்கு அதிகரிப்பு என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
பாகிஸ்தான் அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கையின்படி, 2024-25 நிதியாண்டின் தொடக்கத்தில் அந்நாட்டு மொத்தக் கடன் 76 ட்ரில்லியன் ரூபாயாக (இந்திய மதிப்பில் ரூ.23 லட்சம் கோடி) இருந்த நிலையில், தற்போது 80.6 ட்ரில்லியனாக உயர்ந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பகுதி வெளிநாடுகளில் பெற்ற கடனாகும்.
பாகிஸ்தான் நிதியமைச்சகம் வெளியிட்ட வருடாந்திர கடன் மதிப்பீட்டின் படி, உள்நாட்டு கடன் 15 சதவீதம் அதிகரித்து 54.5 ட்ரில்லியனாகவும், வெளிநாட்டு கடன் 6 சதவீதம் உயர்ந்து 26 ட்ரில்லியனாகவும் உள்ளது. இந்த உயர்வால் அந்நாட்டு பொருளாதாரச் சுமை மேலும் பெருகியுள்ளது.
பொருளாதார நிபுணர்கள் கூறுவதாவது, உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சி அடையாதது, நிதி மேலாண்மையில் ஏற்பட்ட சிக்கல்கள், வெளிநாட்டு நாணயச் சரிவு ஆகியவை கடன் சுமையை அதிகரித்த முக்கிய காரணங்களாகும்.
English Summary
Pakistan credit 80 trillion June 2025