பாகிஸ்தானில் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. நிதி பற்றாக்குறை, அதிகரித்து வரும் பணவீக்கம், குறைந்து வரும் அந்நிய செலவாணி கையிருப்பு மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மை என பல்வேறு பிரச்சினைகளை அந்நாடு எதிர்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் அத்தியாவசிய மற்ற மற்றும் ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவிக்கையில், "தேவையற்ற மற்றும் ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விலைமதிப்பற்ற அன்னிய செலவாணி செலவிடப்படாது" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan bans imports of luxury goods


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->