பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... 13 இந்தியர்கள் பலி...!
Pakistan Army violates ceasefire 13 Indians killed
காஸ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நேற்று நடத்தியது. சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது.

இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை, காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய திடீர் தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளதாவும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய வெளியுறவுத் துறை, போர் நிறுத்த விதிகளை மீறி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தற்போது இந்திய இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
Pakistan Army violates ceasefire 13 Indians killed