AI சொன்ன எண்களே அதிர்ஷ்ட எண்கள்...!-லாட்டரி அடித்து வைரலான இளம்பெண்
numbers given by AI lucky numbers Young woman goes viral after winning lottery
செயற்கை நுண்ணறிவு உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, சாட் ஜி.பி.டி.-யின் உதவியால் லாட்டரி வென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மேலும், அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்த 'கேரி எட்வர்ட்ஸ்' என்ற இளம்பெண், லாட்டரி சீட்டுகளை வாங்கும் பழக்கத்தில் இருந்தவர்.

இவர் ஒரு நாள், லாட்டரி வெல்லும் கனவை நனவாக்குவதற்காக, அவர் நேரடியாக சாட் ஜி.பி.டி.-யிடம் “எந்த எண் கொண்ட சீட்டை வாங்கலாம்?” என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு கிடைத்த பரிந்துரையின் அடிப்படையில் வாங்கிய சீட்டிலேயே அதிர்ஷ்டம் குவிந்து விழுந்தது! 1,50,000 அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 33 லட்சம் பரிசுத் தொகை கேரிக்கு கிடைத்துள்ளது.
ஆனால் இதில் அதிர்ச்சி தரும் திருப்பம் என்னவென்றால்,இந்தப் பெரும் பரிசுத் தொகையை, தனது மறைந்த கணவரின் பெயரில் முழுவதுமாக நன்கொடையாக வழங்கப் போவதாக கேரி அறிவித்துள்ளார்.
“செயற்கை நுண்ணறிவு மூலம் லாட்டரி அடித்த இளம்பெண்!” என்ற தலைப்போடு இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
English Summary
numbers given by AI lucky numbers Young woman goes viral after winning lottery