ஏவுகணை சோதனைகள் தென்கொரியா, அமெரிக்காவை தாக்குவதற்கான பயிற்சி - வடகொரியா - Seithipunal
Seithipunal


தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கூட்டுப்போர் பயிற்சி ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கை என கண்டனம் தெரிவித்த வடகொரியா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து வருகிறது. 

மேலும் கடந்த வாரத்தில் மட்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்பட ஒரே நாளில் 23 ஏவுகணைகளை தென்கொரியா எல்லையை நோக்கி வீசி சோதனையில் நடத்தியுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில் இந்த ஏவுகணை சோதனைகள் குறித்து வடகொரியா ராணுவம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் வடகொரியாவின் சமீபத்திய ராணுவ நடவடிக்கைகள், எதிரிகளின் ஆத்திரமூட்டும் ராணுவ நகர்வுகள் எவ்வளவு விடாமுயற்சியுடன் தொடர்கிறதோ, அவ்வளவும் முழுமையாகவும், இரக்கமின்றியும் வடகொரியா ராணுவம் அவர்களை எதிர்கொள்ளும் என்பதற்கான தெளிவான பதில். 

மேலும் இந்த ஏவுகணை சோதனைகள் தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் முக்கிய இலக்குகளான விமான தளங்கள் மற்றும் அணு ஆயுதங்களை உள்ளடக்கிய ராணுவ கட்டமைப்புகள் போன்றவற்றை இரக்கமின்றி தாக்குவதற்கான பயிற்சியாகும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

North Korea says Missile Tests Training to Strike US South Korea Key Targets


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->