அமெரிக்கா-தென்கொரியா கூட்டு பயிற்சி தொடக்கம்.! அதிரடியாக ஏவுகணைகளை சோதனை செய்த வடகொரியா.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு அமெரிக்காவும், தென்கொரியாகவும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது. இதனால் கொரியா தீபகற்பத்தில் கடந்த ஓராண்டாக போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கும், தென்கொரியாவிற்க்கும் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி இன்று தென் கொரியா கடல் பகுதியில் தொடங்கியது. பல்வேறு வகையான கப்பல்களுடன் நடைபெறும் இந்த பயிற்சி 11 நாட்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, வடகொரியா இன்று ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது. இது தொடர்பாக வடகொரியா அரசு தொலைக்காட்சி வெளியிட்ட பதிவில், வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் நீர்மூழ்கி கப்பலிலிருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவை 1500 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவுக்கும், தென்கொரியாவிற்கும் இடையேயான 'சுதந்திர கேடயம் 23' என்று அழைக்கப்படும் இந்த ராணுவ கூட்டு பயிற்சி 2017க்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea launches missile test in against of South Korea US war drills


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->