இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற திரு.ரோமன் ரோலண்ட் பிறந்ததினம்!
Nobel Prize in Literature winner Roman Rowland Birthday
நாவலாசிரியர், நாடகாசிரியர், வரலாற்று அறிஞரான ரோமைன் ரோலண்ட் 78-வது வயதில் 1944 டிசம்பர் 30 ஆம் தேதி அன்று மறைந்தார். உலகத் தலைவர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகளுடனான தனது நட்பு குறித்து இவர் எழுதியிருந்த நூல், ‘மெமரீஸ்’ என்ற தலைப்பில் இவரது மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.
ரோமன் ரோலண்ட்,பிரான்ஸ் நாட்டின் கிளாமசி என்ற இடத்தில் வசதியான விவசாயக் குடும்பத்தில் ஜனவரி 29, 1866 பிறந்தார். சொந்த ஊரில் ஆரம்பக்கல்வி கற்றார். தத்துவத்தில் பட்டம் பெற்றார். இசையையும் ஆர்வத்துடன் கற்றார்.
எழுத்தாற்றல் மிக்க இவர் 1902-ல் எழுதத் தொடங்கினார். முதலில் ஒருசில நாடகங்கள் எழுதினார். பின்னர் கட்டுரை, வாழ்க்கை வரலாறு, நாவல்களும் எழுதத் தொடங்கினார். 1912-ல் பல்கலைக்கழகப் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர எழுத்தாளரானார்.
ஒருமுறை தாகூரை சந்தித்தபோது, இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற தனது ஆர்வத்தை தெரிவித்தார். ‘விவேகானந்தரைப் படித்தால் இந்தியாவைப் புரிந்துகொள்ளலாம்’ என்று தாகூர் கூற, ஆங்கிலம் தெரிந்த தன் சகோதரியின் உதவியோடு விவேகானந்தரின் நூல்களைப் படித்தார்.

உலகில் பல நாடுகள் குறுகிய மனப்பான்மையோடு சண்டையிட்டுக் கொள்வதைக் கண்டு வேதனை அடைந்தார். மனிதநேயத்தை வலியுறுத்தும் ‘அபவ் தி பேட்டில்’ நூலைப் படைத்தார். ‘மானிட இனம் பரஸ்பரம் அன்பால் ஒன்றிணைய முடியாதா’ என்ற கேள்வி இவருக்குள் எழுந்தது. இதையே கருப்பொருளாக்கி ‘ஜீன் கிறிஸ்டோஃபி’ என்ற நாவலை எழுதினார். இது 10 தொகுதிகளாக வந்து பெரும் வரவேற்பை பெற்றது.
காந்திஜியை மிகவும் நேசித்தார். வாழ்நாள் இறுதிவரை அவருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுக்கும் மனிதராக காந்திஜியை இவர் தன் நூலில் பதிவுசெய்துள்ளார். அவர் தன்னை முத்தமிட்டதை புனித பிரான்சிஸ் மற்றும் டொமினிக் ஆகியோரின் முத்தத்தோடு ஒப்பிட்டு மகிழ்ந்தார். சிக்மண்ட் பிராய்டுடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தார்.
நாவலாசிரியர், நாடகாசிரியர், வரலாற்று அறிஞரான ரோமைன் ரோலண்ட் 78-வது வயதில் 1944 டிசம்பர் 30 ஆம் தேதி அன்று மறைந்தார். உலகத் தலைவர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகளுடனான தனது நட்பு குறித்து இவர் எழுதியிருந்த நூல், ‘மெமரீஸ்’ என்ற தலைப்பில் இவரது மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.
English Summary
Nobel Prize in Literature winner Roman Rowland Birthday