ஆப்கானிஸ்தானில் இனி பூங்காக்களுக்கு யாரும் ஜோடியாக செல்லக்கூடாது.. தலிபான்கள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானின் பொழுதுபோக்கு பூங்காக்களில் ஆண்களும், பெண்களும் ஒரே நாளில் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு இனி வாரத்தில் 4 நாட்கள் புதன் முதல் சனிக்கிழமை வரை ஆண்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்றும், மற்ற மூன்று நாட்கள் பெண்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானில் பாலின பிரிவினை விதிகளை மேலும் அமல்படுத்தும் என்று செய்தி நிறுவனம் ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் தலிபான்கள் தங்களது ஆயுதங்களை பொழுதுபோக்குப் பூங்காக்களுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது, இது தாலிபான்கள் குழுவை மற்ற உலக நாடுகள் மத்தியில் அவர்களின் உருவத்தை மென்மையாகவதற்கான மற்றொரு முயற்சியாக பார்க்கப்பட்டது.

மேலும் கடந்த வாரம் பள்ளிக்கு சென்ற பெண்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். பெண்களுக்காக உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்ற முடிவை திரும்பப் பெறுவதாக தலிபான்கள் அறிவித்தனர்.

இவ்வாறு தலிபான்கள் அடுத்த நடவடிக்கையாக பொழுதுபோக்கு பூங்காக்களில் கட்டுப்பாடு விதித்துள்ளது, அங்குள்ள மக்கள் அடிப்படை உரிமைகளை பெறுவதில் எவ்வளவு சிக்கல் உள்ளது என்பதை காட்டுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No one should go to parks in Afghanistan anymore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->