மதவழிபாட்டு தலம் அருகே துப்பாக்கி சூடு - 9 பேர் பலி; 30 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் உள்ள வாதி அல் கபீர் என்ற பகுதியில் இமாம் அலி பள்ளிவாசல் என்ற இஸ்லாமிய மத வழிபாடு தலம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் மதவழிபாட்டு தலம் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தினர். 

இந்த பதிலடி தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி, 4 பாகிஸ்தானியர்கள் உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல், மர்ம நபர்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். சன்னி பிரிவினரை பெரும்பான்மையாக கொண்ட ஓமனில் ஷியா பிரிவு மத வழிபாட்டு தலமான இமாம் அலி பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nine peoples died and thirty peoples injured in oman for gun shoot near place of worship


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->