இஸ்ரேல் படை தாக்குதல் - ஒன்பது பாலஸ்தீனியர்கள் பலி.!
nine palastenians died for isrel attack
நேற்று இஸ்ரேலியப் படைகள் ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் மோதலில் ஈடுபட்டனர். அந்த மோதலில் பெண் ஒருவர் உட்பட ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதனால், இந்த ஆண்டில் இஸ்ரேலியப் படையால் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலியப் படைகள் தங்கள் தரப்பில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள இஸ்ரேலியப் படைகள், ஒரு அறிக்கையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்ததாவது, "பல பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ள நிலையில், மருத்துவப் பணியாளர்கள் ஜெனின் அகதிகள் முகாமுக்கு வருவதை இஸ்ரேலியப் படைகள் சாத்தியமற்றதாக்கியுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், உள்ளூர் மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் குழந்தைகள் வார்டு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, பாலஸ்தீன அதிகார சபையின் பிரதமர் முகமது ஸ்டய்யே, பாலஸ்தீனத்தில் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரிப்பதால் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்பு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
English Summary
nine palastenians died for isrel attack