நிமிஷா பிரியாவுக்கு நிம்மதி..ஏமனில் விதிக்கப்பட்ட மரண தண்டனை தற்காலிக தள்ளிவைப்பு!
Nimisha gets relief The death penalty imposed on Aiman is temporarily suspended
கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாக்கு ஏமனில் விதிக்கப்பட்ட மரண தண்டனை, அதிரடியாக தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான நிமிஷா பிரியா, ஏமனில் 2015ம் ஆண்டு தலால் அப்தூ மஹ்தி என்பவருடன் சேர்ந்து கிளினிக் ஒன்றைத் தொடங்கினார். ஆனால் பின்னர் அவர், திருமண மோசடி, சித்ரவதை, மிரட்டல் உள்ளிட்ட தாக்குதல்களை சந்திக்க நேரிட்டது.
இது தவிர, மஹ்தியின் கொடுமைகள் தொடர்ந்ததால், பிரியா மயக்க மருந்து செலுத்தி பாஸ்போர்ட் திருப்பப் பெற முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக மஹ்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிரியா கொலை வழக்கில் சிக்கினார்.
ஏமனில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்து, மேல்முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டன. மரண தண்டனை நாளை நிறைவேற்றப்பட இருந்தது.
இந்நிலையில், பல்வேறு முறைகளில் அரசு தலையீடு செய்ததற்குப் பின், தண்டனை நிறைவேற்றம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, மத்திய அரசு, உயர் நீதிமன்றம் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை பெற்றுள்ளது. தற்போது, நிமிஷா பிரியாவின் குடும்பம் மற்றும் இந்தியர் சமூகத்தில் மிகுந்த நிம்மதி ஏற்பட்டுள்ளது.தண்டனையை நிரந்தரமாகத் தள்ளி வைக்கவும், மன்னிப்புக்கான வழிகளையும் அரசு ஆய்வு செய்து வருகிறது.
English Summary
Nimisha gets relief The death penalty imposed on Aiman is temporarily suspended