ஆபாச படம் பார்த்த சிறுவன்.. வீட்டிற்கே சென்று சர்பிரைஸ் கொடுத்த நடிகை.. திகைத்துப்போன தாய்.!! - Seithipunal
Seithipunal


இணையத்தில் உள்ள ஆபாசப்படத்தில் காண்பிக்கப்படும் தாம்பத்தியம் மற்றும் உடலுறவு தொடர்பான வீடியோ காட்சிகளை போன்றே, இயல்பு வாழ்க்கையிலும் தம்பதிகளுக்கு இடையேயான தாம்பத்தியத்தில் செயல்பட வேண்டும் என்று பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். இந்த விஷயம் நடக்காமல் போகும் பட்சத்தில், தம்பதிகளுக்குள் மனக்கசப்பும் ஏற்படும். 

ஆபாச படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தாம்பத்திய உறவுமுறைகள் மற்றும் வன்முறைகள், விபரீதமான புணர்ச்சி நிலைகள் போன்றவை கிராபிக்ஸ் மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சைகளுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் விஷயங்களாகும். இதனை நிஜ உலகில் செயல்படுத்தினால் உயிர்சேதம் ஏற்பட கூட வாய்ப்புகள் இருக்கிறது. 

இந்த விஷயம் பல பிரச்சனைகளுக்கு முதற்கண்ணாக இருக்கும் நிலையில், நியூசிலாந்து நாட்டின் அரசு விழிப்புணர்வு வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த வீடியோ காட்சியில் ஆபாச பட நடிகர்களை வைத்தே குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த வீடியோ காட்சியில், ஆபாச பட நடிகர் மற்றும் நடிகை குறித்த வீட்டின் அழைப்புமணியை ஒலிக்கிறார். 

வீட்டிற்குள் இருந்து வரும் தாய் வயதுள்ள பெண்மணி இவர்களை கண்டு அதிர்ச்சியடைவே, அந்த தாய் வயது கொண்ட பெண்மணியிடம் தங்களின் மகன் அலைபேசி மற்றும் கணினியின் இணையம் வழியாக தங்களது ஆபாச படத்தை பார்ப்பதாகவும், அவனது தாம்பத்தியம் குறித்து தவறான புரிதலை கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார். இதோடு தாய் மகனை கண்டிப்பதுடன் வீடியோ காட்சிகள் நிறைவு பெறுகிறது. 

இந்த விஷயம் தொடர்பாக தெரிவித்த நியூசிலாந்து செய்தி தொடர்பாளர், இன்றுள்ள இளம் தலைமுறையினர் கலவி குறித்து ஆபாச படங்கள் பார்த்து அதிகளவு தெரிந்து கொள்கின்றனர். என்னதான் செய்தாலும் ஆபாச படங்களை அவர்கள் பார்த்து கலவி குறித்து அறிந்து வருவதால், படத்திற்கும், நிஜ வாழ்க்கையிலும் உள்ள வித்தியாசம் தொடர்பாக விளக்கும் பொருட்டு வித்தியாசமாக விழிப்புணர்வு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Zealand Country Reality Awareness video about porn movie and reality sex


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal