மாஸ்க் போடலையா வாங்க.. வந்த குழி தோண்டுங்க.. பக்காவான தண்டனை.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் இச்சமயத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு இந்தோனேஷியாவில் வழங்கப்படும் ஒரு நூதன தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள்தால் அந்த நாட்டு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவல் அதிகமாக இருப்பதால் பொது இடங்களுக்கு செல்லும் போதும் மற்றும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது பல நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தோனேசியாவில் ஜாவா என்ற பகுதியில் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களுக்கு நூதன முறையில் தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த தண்டனை யாதெனில் முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் அந்தப்பகுதியில் கொரோனாவினால் உயிர் இழந்தவர்களுக்கு சவக் குழி தோண்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இந்த தண்டனைக்கு பயந்து பலர் முக கவசம் அணிந்து வந்தாலும் சவக்குழி தோண்ட போதுமான ஆட்கள் கிடைக்காத காரணத்தால் மற்றும் ஆட்கள் பற்றாக்குறையை தீர்க்கவும் இந்த தண்டனை பயன்படுகிறது என்று ஜாவாவின் அதிகரிகள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new punishment who did not wear mask 


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal