புதிய கடல் வாழ் உயிரினத்திற்கு 'அல்டிசா வோசின்ஹா' என கேப் வெர்டே கோல்கீப்பர் வோசின்ஹாவின் பெயர் சூட்டி கெளரவம்..! - Seithipunal
Seithipunal


நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தனது அபார ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் கேப் வெர்டே கால்பந்து அணியின் கோல்கீப்பர் வோசின்ஹா. 

இந்த கேப் வெர்டே இந்த கால்பந்து தொடரில் பட்டம் வெல்லக்கூடிய அணிகளாக கருதப்படும் ஸ்பெயின், அர்ஜெண்டினா உள்ளிட்ட அணிகளுக்கு சவால் கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம் கோல்கீப்பர் வோசின்ஹா.  இத்தனைக்கும் உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக அந்த அணி விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

40 வயதான அவர், இந்த தொடரில் எதிரணியின் கோல் முயற்சிகளை சிறப்பாக தடுத்திருந்தார். உலகக் கோப்பை தொடருக்கு முன்பு 50k இருந்த அவரது இன்ஸ்டா ஃபாலோயர்களின் எண்ணிக்கை பல மில்லியன்களாக உயர்ந்தது.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான ஜீசஸ் ஆர்டியா, கியூபா கடல் பகுதியில் சுமார் நான்கு மில்லிமீட்டர் அளவு கொண்ட புதிய கடல் வாழ் உயிரினத்தை கண்டறிந்துள்ளார்.

இது குறித்து அவர் ஆய்வறிக்கையும் எழுதியுள்ளார். அப்போது ஸ்பெயின் அணிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருதை வோசின்ஹா வென்றிருந்தார். அத்துடன், கேப் வெர்டே நாட்டிற்கு தனக்கு உள்ள தொடர்புக்கு வலு சேர்க்கும் வகையில் அதற்கு 'வோசின்ஹா' பெயரை சூட்டி கவுரவித்துள்ளார். இதன் மூலம் அந்த உயிரினம் 'அல்டிசா வோசின்ஹா' என இப்போது அறியப்படுகிறது.

இதற்கு முன்பு கடந்த 2019-இல் ஆர்டியா கண்டறிந்த கடல் நத்தை உயிரினத்துக்கு ரியல் மாட்ரிட் மற்றும் கோஸ்டாரிகா அணியின் கோல்கீப்பர் கெய்லர் நவாஸ் பெயரை சூட்டியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New marine creature named after Cape Verde goalkeeper Vosinha


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->