உலகமே வியந்த Money Heist கொள்ளையர்கள் மீண்டும் வருகிறார்களா..? அப்டேட் கொடுத்த நெட்ஃபிளிக்ஸ்; ரசிகர்கள் உற்சாகம்..! - Seithipunal
Seithipunal


தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பாகி பின்னர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்பானிஷ் வெப் சீரிஸான 'Money Heist' உலக அளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதன் அடுத்த சீசன்கள் வெளியான நிலையில், 2021-இல் வெளியான ஐந்தாம் சீசனோடு இந்த சீரிஸ் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் இந்த தொடர் கொரியா மொழியில் Money Heist: Korea – Joint Economic Area என 2020-இல் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. பெர்லின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி Money Heist spin-off சீரிஸாக வந்தது 'Berlin' என்ற அதன் இரண்டாவது சீசன் மே 15-ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நேற்று நெட்ஃபிளிக்ஸ் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, நெட்ஃபிளிக்ஸ் "புரட்சி இன்னும் முடியவில்லை, Money Heist உலகம் தொடர்கிறது..." எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால், இது Money Heist கதையின் தொடர்ச்சியா அல்லது முன் கதையா? இல்லை Berlin போல spin-off-ஆ என்பது குறித்த எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Netflix provides an update on Money Heist


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->