எதிர்வரும் 2026 மார்ச் 05-இல் பாராளுமன்ற தேர்தல்: நேபாள ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு..!
Nepals upcoming parliamentary elections on March 5 2026
நேபாளத்தில் கடந்த 08 ஆம் தேதி இளைஞர்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார். அத்துடன் அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளதால் அங்கு ஆட்சி கலைக்கப்பட்டது. நேற்று இடைக்கால பிரதமராக சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேபாளத்தில் அடுத்த பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் 05-ஆம் தேதி நடைபெறும் என்று ஜனாதிபதி ராமசந்திர பவுடேலின் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமரின் பரிந்துரையின் பேரில் பிரதிநிதிகள் சபையைக் ஜனாதிபதி பவுடேல் கலைத்துள்ளார். இதனையடுத்து அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரும் 2026, மார்ச் 05-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
English Summary
Nepals upcoming parliamentary elections on March 5 2026