'நேட்டோவுக்கு நாங்கள்தான் தேவை'...! - டிரம்ப் பேச்சு சர்வதேச கவனம் ஈர்ப்பு
NATO needs usTrump speech attracts international attention
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்து வருவது உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த பலனை அளிக்காத நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட ஆலோசனைகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

முன்னதாக, உலக வர்த்தகத்திற்கு முக்கிய வாயிலாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவைத்து கடும் அழுத்தம் செலுத்தியிருந்த ஈரான், தற்போது நிலைமைகள் மெல்ல சீராகும் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் மீண்டும் செல்ல அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக லெபனான் - இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த சூழ்நிலையில், டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கடுமையான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது,"ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான பிரச்சினை ஏறக்குறைய தீர்வுக்கு வந்துவிட்ட நிலையில், நேட்டோ அமைப்பிலிருந்து உதவி தேவையா என கேட்டு அழைப்பு வந்ததாகவும்,இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்கள் ஆதரவு தேவைப்பட்டிருக்கலாம்; ஆனால் இப்போது எங்களுக்கு உங்கள் உதவி அவசியமில்லை” என்று தெளிவாக பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், “எங்களுக்கு தேவைப்பட்ட முக்கிய தருணங்களில் நேட்டோ எந்த பயனும் அளிக்கவில்லை; உண்மையில் அமெரிக்காவுக்குத் நேட்டோ தேவையில்லை, நேட்டோவுக்குத்தான் அமெரிக்கா தேவைப்படுகிறது” என அவர் கடுமையாக விமர்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கருத்துக்கள் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளதுடன், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் எந்த திசையில் நகரும் என்பது குறித்து உலக நாடுகள் தீவிரமாக கவனித்து வருகின்றன.
English Summary
NATO needs usTrump speech attracts international attention