சாதனை படைத்த அமெரிக்கா வானியல் ஆய்வாளர்கள்.. விரைவில் வெளியாகும் ஆய்வு தகவல்கள்.! - Seithipunal
Seithipunal


சூரியனை பூமி உட்பட 9 கோள்கள் சுற்றி வருகிறது. இதனைப்போன்று விண்மீன்களும் சூரியனை சுற்றி வருகிறது. பாறாங்கல் போல காணப்படும் கற்கள் மற்றும் பறக்கும் மலைகளும் இதில் அடங்கும். இதனை பொதுவாக ஆஸ்ட்ராய்டு (Asteroids) என்று கூறுவார்கள். 

இந்த ஆஸ்டிராய்டுகளை ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் ஆளில்லாத விண்கலத்தை அனுப்பி வைத்து வரும் நிலையில், கற்கள் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். இதற்கான முயற்சியை ஜப்பான் மற்றும் அமெரிக்கா தனித்தனியே மேற்கொண்டு வருகிறது. 

இவ்வாறாக அமெரிக்கா அனுப்பிய ஆளில்லா விண்கலமான " ஆரிசிஸ் ரெக்ஸ் ", கடந்த 2016 ஆம் வருடத்தில் பெண்ணு என்ற ஆஸ்டிராய்டுக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் தற்போது பெண்ணுவின் வடதுருவ கற்களின் மாதிரியை சேகரித்துள்ளது.

இதனால் விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகிய நிலையில், கற்களின் மாதிரியை பூமிக்கு கொண்டு வரும் முயற்சியும் நடந்து வருகிறது. பூமியில் இருந்து 100 மில்லியன் தொலைவில் உள்ள நிலையில், விண்வெளியின் பல சிதறிய கோள்களின் திடமாக நான்கரை பில்லியன் வருடத்திற்கும் மேல் விண்ணில் இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்ணுவின் மாதிரியை சேகரித்துள்ள விண்கலம் 2023 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் பூமிக்கு திரும்பலாம் என்றும், பெண்ணு பூமிக்கு வந்ததும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NASA Takes sample Pennu Asteroid


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->