தாலிபான்களுக்குள் கும்மாங்குத்து., தாலிபான் துணை பிரதமர் சுட்டுக்கொலை.?! - Seithipunal
Seithipunal


ஆப்கானில் ஆட்சி அமைத்துள்ள தாலிபான்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் துணைப்பிரதமர் முல்லா அப்துல் கனி பராதர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருந்தன. இந்த தகவலுக்கு தலிபான் தலைவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தாலிபான் பயங்கரவாதிகளின் அரசியல் பிரிவு தலைவராக பதவி வகித்து வந்தவர் முல்லா அப்துல் கனி பராதர். இவர் அண்மையில் ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள தாலிபான் அரசின் துணை பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

இவர்களின் ஆதரவாளர்களுக்கும், ஹைக்கானிப் பிரிவு தலைவர் சிராஜீதின் ஹைக்கானிக்கும்இடையே மோதல் போக்கு நிலவி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் துணைப்பிரதமர் முல்லா சுட்டு படுகொலை செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் அண்மையில் வெளியாகின.

தாலிபான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் அடிக்கடி ஊடகத்தை சந்தித்து வந்த முல்லா, அண்மையில் அதிகம் தென்படவில்லை. இதன் காரணமாகவே இந்த தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும், மத்திய கிழக்கு நாடான கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முஹம்மது பின் அப்துல் ரகுமான் சமீபத்தில் ஆப்கான் வந்தார். அவரை அமைச்சரவை பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.

இந்த முக்கிய சந்திப்பில் கூட துணைப்பிரதமர் முல்லா இடம்பெறவில்லை. இதையடுத்து முல்லாவின் மரணம் குறித்து வெளியான தகவல் மீது பலத்த சந்தேகம் உண்டானது. இந்தநிலையில், தாலிபான்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

அவர்கள் தரப்பில் வெளியிடப்பட்ட மறுப்பு செய்தியில், துணைப்பிரதமர் முல்லா கொல்லப்படவில்லை. இந்த தகவல் அனைத்தும் அடிப்படையில் ஆதாரமற்றது. இது உண்மைக்கு மாறான தகவல் என்று தெரிவித்துள்ளனர். மேலும் துணை பிரதமர் முல்லா கத்தாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mullah Abdul Ghani Baradar


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->