மகன் திருமணத்தை திருவிழாவாக கொண்டாடும் முகேஷ் அம்பானி - எவ்வளவு செலவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 112 பில்லியன் டாலர் ஆகும். இதன் இந்திய மதிப்பு ஏறத்தாழ ரூ. 10 லட்சம் கோடி ஆகும். 

இவ்வளவு சொத்து மதிப்பு கொண்ட அம்பானி தனது இளையமகன் ஆனந்த அம்பானியின் திருமணத்திற்காக தனது சொத்தில் ஒரு சதவீதம் அதாவது ரூ. 1000 கோடியை மட்டுமே செலவு செய்ய இருக்கிறார் என்ற தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும்- ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நிச்சயமான நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

திருமணத்திற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்ற நிலையில் அம்பானி குடும்பம் இப்போதே திருமண விழாக்களைத் தொடங்கி இருக்கிறது. நேற்று திருமண விழாவின் ஒருபகுதியாக குஜராத்தி பாரம்பரிய உணவு வகைகளை ஜாம்நகரில் உள்ள ஜோக்வாட் கிராம மக்கள் 51,000 பேருக்கு வழங்கினர். அனைவரும் இந்த விருந்தில் கலந்துகொண்டு மகிழ்வோடு சென்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mukesh ambani spend thousand crores money for son marriage


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->