2026 பிப்ரவரியில் பொதுத்தேர்தல்: வங்கதேச அரசியல் கட்சிகளுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ள முகமது யூனுஸ்..! - Seithipunal
Seithipunal


வங்கதேசத்தில் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அறிவித்துள்ளார். அந்நாட்டில், ஏற்பட்ட மாணவர் போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்தற். அதனை தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.

முன்னாள் பிரதமராகஇருந்த ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்த எழுச்சியின் முதலாமாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அரசு தொலைக்காட்சி வாயிலாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது: வங்கதேசத்தில் வரும் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும், இடைக்கால அரசாங்கத்தின் சார்பாக, பொதுத் தேர்தலை நடத்துமாறு தேர்தல் கமிஷன், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தான் கடிதம் எழுதுவேன் என்று கூறியுள்ளார்.

அத்துடன், இந்த தேர்தல் வங்கதேசத்தின் வரலாற்றில் மகிழ்ச்சி, கொண்டாட்டம், அமைதி மற்றும் நல்லுறவு ஆகியவற்றின் அடிப்படையில் மறக்க முடியாததாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முடிக்க நாளை முதல் ஏற்பாடுகளைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், அரசியல் கட்சிகள் அவர்களது தேர்தல் அறிக்கைகளிலும், வாக்குறுதிகள் மற்றும் திட்டங்களிலும், இளைஞர்களை விட்டுவிடக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், பெண்களை மறந்து விட்டுவிடக்கூடாது என்றும்,  வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்த இளைஞர்களுக்கு உலகையும் மாற்றும் சக்தி உள்ளது என்பதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள் என்றும் அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Muhammad Yunus announces that general elections will be held in Bangladesh in February 2026


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->