'விஜய் அரசியலுக்கு வந்த பின் திருமாவளவன் எண்ண ஓட்டத்தில் பிரச்சினை உள்ளது'; அண்ணாமலை..!
Annamalai says there is a problem with Thirumavalavan's vote flow after Vijay entered politics
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை, நீதிமன்றத்தில் வைத்து வழக்கறிஞர் ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவத்தை கண்டித்து, சென்னையில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, காரில் வந்து கொண்டிருந்த போது அவருடைய கார் மோதியதாக வழக்கறிஞர் ஒருவரை விசிகவினர் தாக்கிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற நீதிபதி மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில், ஒரு வழக்கறிஞரை தாக்குகின்றனர். திருமாவளவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., ஒரு கட்சித் தலைவர். இதுகுறித்து தமிழக அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின் திருமாவளவன் எண்ண ஓட்டத்தில் பிரச்சினை உள்ளதாகவும், அவர் குழம்பி போய் இருக்கிறார். வக்கீலை தாக்கியது குறித்து பதிவிட்டதற்காக என் மீது அவர் குற்றம் சாட்டுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எத்தனை காலத்திற்கு வன்முறையை கையில் எடுத்து அரசியல் செய்வார் என்றும், காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனம் மருந்து தயாரித்ததில் ம.பி., யில் 23 குழந்தைகள், ராஜஸ்தானில் 03 குழந்தைகள் உயிரிழந்தனர். தமிழக அரசு மருந்து ஆய்வாளர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது.
தமிழக அரசுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல, மாய தோற்றத்தை உருவாக்கி இருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
English Summary
Annamalai says there is a problem with Thirumavalavan's vote flow after Vijay entered politics