ஈரான்: 500-க்கும் மேற்பட்டோருக்கு நடப்பாண்டில் மரண தண்டனை... அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


ஈரானில் நடப்பாண்டி இதுவரை 500ககும் மேற்பட்டோர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்று ஈரான் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று மாஷா அமினி(22) என்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்து தாக்கியதில் மாஷா உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் தங்களது தலைமுடியை வெட்டியும் ஹிஜாப்களை எரித்தும் போராட்டங்களில் ஈடுபட்டனர். பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஹிஜாப் எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈரான் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நார்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு, நடப்பாண்டில் ஈரானில் இதுவரை 504 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

மேலும் நியாயமான விசாரணை இல்லாமல் மரண தண்டனை விதிக்கப்பட்டது என்று மனித உரிமைகள் குழு இயக்குனர் மஹ்மூத் அமிரி-மொகத்தம் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2021-ல் 333 பேர் தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

More than 500 people have been executed in Iran this year


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->