குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் தொடர்பாக அவசர கூட்டத்தை நடத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் தொடர்பாக அவசர கூட்டத்தை நடத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இந்நிலையில் தற்பொழுது உலகம் முழுவதும் 58 நாடுகளில் 6000-க்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் மொத்த பாதிப்புகளில் 85 சதவீதம் ஐரோப்பாவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குரங்கு அம்மை நோய் பல நாடுகளில் தொடர்ந்து பரவி வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பரவும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் தொடர்பாக அவசர கூட்டத்தை நடத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் குரங்கு அம்மை நோய் நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளதால் மிகுந்த கண்காணிப்பு தேவை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

More tha six thousand people affected Monkeypox


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->