நேபாள மலைச்சிகரத்தில் மாயமான இந்திய மலையேறும் வீரர் மீட்பு..! - Seithipunal
Seithipunal


நேபாளத்தின் அன்னபூர்ணா மலை சிகரத்தில் மாயமான இந்திய மலையேறும் வீரர் உயிருடன் மீட்கப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிஷாங்கத் பகுதியைச் சேர்ந்த அனுராக் மாலு(34). மலையேற்ற வீரரான இவர், இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலையின் மூன்றாம் முகாமில் இருந்து இறங்கும்போது கடந்த 17ஆம் தேதி 6000 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி விழுந்து மாயமானார்..மேலும் அன்னபூர்ணா மலை உலகின் பத்தாவது உயரமான மலையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 8,091 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

இதையடுத்து, மாயமான அனுராக் மாலுவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில் 5 பேர் கொண்ட குழுவினர் வான்வெளி தேடுதல் மூலம் அனுராக் மாலுவை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட வந்த நிலையில், அனுராக் மாலு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலுவின் சகோதரர் ஆஷிஷ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Missing Indian mountaineer rescued from Nepal annapoorna mountain


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->