மிஸ் அர்ஜென்டினாவும், மிஸ் புவேர்ட்டோ ரிக்கோவும் காதல் திருமணம் - Seithipunal
Seithipunal


அர்ஜென்டினா மற்றும் போர்ட்டோ ரிக்கோவை சேர்ந்த அழகிகளான மரியானா வரேலா மற்றும் ஃபேபியோலா வாலண்டின் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

2020ஆம் ஆண்டில் மிஸ் அர்ஜென்டினா மற்றும் மிஸ் புவேர்ட்டோ ரிக்கோவை வென்ற அழகிகளான மரியானா வரேலா மற்றும் ஃபேபியோலா வாலண்டின் இருவரும் இரண்டு வருடங்கள் ரகசியமாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் 2020 இல் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் அழகி போட்டியின் போது சந்தித்தனர். இதையடுத்து அவர்கள் நண்பர்களாக பழகி வந்த நிலையில், ஒருவரை ஒருவர் விரும்ப தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில் லெஸ்பியன் ஜோடியாக மாறிய இவர்கள், திருமணம் செய்து கொண்டதை அறிவித்துள்ளனர். திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர். இவர்கள் இருவரும் அக்டோபர் 28 அன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

போர்டோ ரிகோவின் சான் ஜுவானில் உள்ள திருமணப் பதிவு அலுவலகத்திற்கு வெளியே அவர்கள் வெள்ளை நிற உடையணிந்து ஜோடியாக காணப்படுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Miss Argentina and Miss Puerto Rico get married


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->