#வீடியோ: நியூசிலாந்து அமைச்சரான சென்னை பெண்., முதல் உரையை தாய்மொழியில் பேசி அசத்தல்.!  - Seithipunal
Seithipunal


சென்னையை பூர்வீகமாக கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணன் என்பவர், நியூசிலாந்து நாட்டின் பூர்வகுடி மக்களுக்கான அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார். நியூஸிலாந்தில் பிரதமர் ஜெசிந்தா தன்னுடைய தலைமையிலான அமைச்சரவையை விரிவாக்கம் செய்து இருக்கின்றார். 

அந்த அமைச்சரவையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு இருக்கின்றது. 

சென்னையில் பிறந்தவரான பிரியங்கா ராதாகிருஷ்ணன் கேரளாவில் வளர்ந்தார். சிங்கப்பூர் மற்றும் நியூஸிலாந்திலும் கல்வி பயின்றார். நியூஸிலாந்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த பின்னர், அங்கு இருக்கின்ற இந்திய வம்சாவளியினருக்காக குரல் கொடுத்து வந்துள்ளார். 

அதன் பின்னர், தொழிலாளர் கட்சியில் இணைந்து நாடாளுமன்றத்திற்கு எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்டார். தற்போது ஜெசிந்தா தலைமையிலான அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண்மணியாக இடம்பெற்று இருக்கின்றார். 

இந்த நிலையில், நியூசிலாந்து பாராளுமன்றத்தில் தனது அறிமுகத்திலன் போது பிரியங்கா மலையாளத்தில் பேசி வீடியோவை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார். அதில்,"அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள். எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்." என்று கூறிவிட்டு, பின் ஆங்கிலத்தில் "மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே, முதல் முறையாக எனது தாய்மொழியான மலையாளத்தில் பேசியுள்ளேன்" என்று பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister of new zealand women spokes in mother toungue 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->