விஷவாயு கசிவால் வெடித்த சுரங்கம்: நைஜீரியாவில் 38 தொழிலாளர்கள் பலி! - சட்டவிரோத சுரங்கங்களுக்கு எதிராக கோபக் குரல் - Seithipunal
Seithipunal


நைஜீரியா நாட்டின் பிளாட் டியூ மாகாணத்தில் உள்ள வேஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் தினமும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அதிகாலை வேளையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென காா்பன் மோனாக்சைடு எனும் விஷவாயு கசிவு ஏற்பட்டது. சில நொடிகளில் அந்த வாயு பரவி, தீப்பற்றி வெடிப்பு சம்பவமாக மாறியதால், சுரங்கம் முழுவதும் குழப்பநிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிக்கியவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். எனினும், துரதிர்ஷ்டவசமாக 38 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கடுமையாக காயமடைந்த 27 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி சட்டவிரோதமாக செயல்படும் சுரங்கங்களில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருவது கவலைக்குரியதாக மாறியுள்ளது.

இதனால், சட்டவிரோத சுரங்கங்களை உடனடியாக மூடி, தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mine explosion due toxic gas leak 38 workers killed Nigeria Voice anger against illegal mining


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->