மே மாதத்திற்குள் 8,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மெட்டா..! - Seithipunal
Seithipunal


ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தலைமை நிறுவனமான மெட்டா, உலகெங்கிலும் உள்ள கிளைகளில் 10% சதவீதம் ஊழியர்களை மே மாதத்திற்குள் பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த 06 மாதங்களில் இந்த பணிநீக்க நடவடிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐ துறையில் பல நூறு கோடி ரூபாயை முதலீடு செய்துள்ள நிலையில் மெட்டா இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, ஏஐ பயன்பாடு காரணமாக ஐடி உள்பட பல்வேறு துறைகளில் வேலையிழப்புகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதாவது, மனிதர்கள் பல மணி நேரம் செய்யக்கூடிய வேலையை ஏஐகள் சில நிமிடங்களில் செய்வதால், ஒயிட் காலர் வகை பணிகள் பலவற்றில் ஏஐ ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆரக்கிள், அமேசான் உலகின் டாப் நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டன. அந்த பட்டியலில் பேஸ்புக், வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவும் இணைந்துள்ளது. மே 20-ஆம் தேதி முதல் தொடங்கும் முதல் கட்ட பணி நீக்கத்தில் உலகளவில் உள்ள மெட்டா பணியாளர்களில் சுமார் 10% சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பணிநீக்கம் செய்யவுள்ளவர்களின் எண்ணிக்கை தோராயமாக 8,000 ஆக இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பல நூறு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து வருகிறார். இந்த முதலீடு நிறுவனத்தின் செயல்பாட்டை முழுமையாக மாற்றி அமைக்கும் நோக்கில் செய்யப்பட்டு வருகிறது. ஏஐ உதவியால் பல பணிகளை தானியங்கி முறையில் செய்ய முடியும் என்பதால் பெரிய அளவிலான மனித ஊழியர்கள் தேவை குறையும் நிலை உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Meta to lay off 8000 employees by May


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->