கெர்சன் பகுதியில் ரஷ்யா தாக்குதல் - மகப்பேறு மருத்துவமனை சேதம் - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் பத்து மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இப்போரின் தொடக்கத்திலிருந்தே கெர்சான் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரஷ்யா, உக்ரைன் படைகளின் தீவிர தாக்குதலினால் கெர்சான் பகுதியில் ரஷ்யப்படைகளை திரும்ப பெற்றது.

இருப்பினும் கெர்சான் மாகாணம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வான்வழி தாக்குதலை ரஷ்யா தீவிரமாக நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யப் படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் கெர்சான் பகுதியில் உள்ள மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் யாரோஸ்லாவ் யானுஷெவிச் தெரிவித்துள்ளார்.

ஆனால் நோயாளிகளுக்கும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் உக்ரைனின் கிழக்கு நகரமான சோலாடரில், இருதரப்பினருக்கும் தீவிர சண்டை நடைபெற்று வருவதாகவும், ரஷ்யா தனது ஆயிரக்கணக்கான சொந்த மக்களையே படுகொலைக்கு தள்ளுவதாகவும் உக்ரைன் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ஹன்னா மல்யார் ரஷ்யாவை குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maternity hospital damaged as Russian shell attack on kherson region


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->