மலேசியாவில் பரபரப்பு! போலீஸ் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்து! -வைரல் வீடியோ
Malaysia in turmoil Police helicopter crashes into river Viral video
மலேசியா நாட்டில் நேற்று ஜோகூரிலுள்ள புலாய் ஆற்றில் ஒரு காவல்துறை ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 2 மூத்த காவல் அதிகாரிகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

மேலும், மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமானி உட்பட 5 பேரை மீட்டனர்.விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்களில், இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.அதுமட்டுமின்றி, இந்த சம்பவம் பயிற்சியின் போது நடந்ததாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
English Summary
Malaysia in turmoil Police helicopter crashes into river Viral video