#JUSTIN || நியூசிலாந்தின் தெற்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்தின் தெற்கு கடற்கரை பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது தெற்கு கடற்கரையில் ஆக்லாந்து தீவுகளுக்கு அருகே பூமியின் மேற்பரப்பில் இருந்து 33 கிலோமீட்டர் (21 மைல்) தொலைவில், 10 கிலோ மீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உடனடி சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை மற்றும் சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பாக நியூசிலாந்தில் உள்ள கெர்மாடிக் தீவுகளில் கடந்த ஏப்ரல் மாதம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Magnitude 6 point 2 earthquake hits newzealand south coast


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->