ஜெர்மனி || இன்று 800 லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து.! - Seithipunal
Seithipunal


ஜெர்மனியில் விமானிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் இன்று லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் 800 விமானங்களை ரத்து செய்துள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் விமான சேவை நிறுவனமான லுஃப்தான்சாவில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் விமானிகள் மற்றும் இதர ஊழியர்கள், தங்கள் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், நிறுவனம் இதனை நிராகரித்ததால் விமானிகள் சங்கம் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. 

இதையடுத்து, ஜெர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் முனிச்சில் இருந்து புறப்படக்கூடிய சுமார் 800 லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சரக்கு விமானங்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lufthansa airlines cancels 800 flights


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->