கொரோனாத் தொற்று : வடகொரியாவில் ஊரடங்கு அமல்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலக நாடுகள் முழுவதும் பரவி உலுக்கியது. இந்த வைரஸினால், ஒருபுறம்  உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், ஒருபுறம் பொருளாதார பாதிப்பு உலக நாடுகளை திண்டாட வைத்தது. 

இந்த கொரோனாத் தொற்றைத் தடுக்கும் வகையில், உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டது. அதாவது, 144 தடை உத்தரவு, விமான சேவை ரத்து, உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டது.

இந்தியாவில் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த ஆண்டு முதல் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக உலகம் எங்கும் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இது, உலக மக்களிடையே கொரோனா அடுத்த அலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக வடகொரியா நாட்டில் கொரோனா வைரஸ் தாண்டவம் ஆடத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், வடகொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தலைநகர் பியோங்யாங்கில்  5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி, மக்கள் வீடுகளிலேயே இருப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lockdown in northkorea for corona virus


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->