பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் நியமனம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக உள்ள ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவிக் காலம் வரும் 29ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் பதவிக்காக ஆறு மூத்த அதிகாரிகளின் பெயர்களை ராணுவம் அனுப்பியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

இதையடுத்து இது தொடர்பாக, பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சமீபத்தில் லண்டனில் வசிக்கும் தன் சகோதரரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீபுடனும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், அந்நாட்டின் முன்னாள் உளவுத் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சையத் அசிம் முனீரை அந்நாட்டின் ராணுவத் தளபதியாக நியமித்துள்ளார். மேலும் லெப்டினன்ட் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சாவை பாகிஸ்தான் கூட்டுப் படைகளின் தலைவராக நியமித்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இராணுவம் வரலாற்று ரீதியாக மிகப்பெரிய அரசியல் செல்வாக்கைப் பெற்றுள்ளது மற்றும் அதன் 75 ஆண்டுகால வரலாற்றில் பாதி நாட்டை ஆட்சி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lieutenant General Asim Munir appointed as Pakistan new Army chief


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->